Friday, December 26, 2025 3:03 pm
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது,
நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.
அதற்கு முந்தைய நாளில் 170,069 வாகனங்கள் பயணித்திருந்ததுடன், அதன் மூலம் 61.7 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என வீதி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

