Sunday, November 9, 2025 12:50 pm
சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் இரண்டரை சதவீதத்தினால் அதிகரிப்பு ஏற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக சுமார் பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனம் சுமார் ரூ. 250,000 அதிகரிக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமாயின் ரூபாவில் தாக்கம் ஏற்படலாம் எனவும், இது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியின் வருமானத்தில் புதிதாக சுமார் 25,000 முதல் 30,000 பங்காளிகள் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

