Wednesday, October 29, 2025 1:33 pm
வடக்கிற்கான தொடருந்து சேவை தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண தொடருந்து போக்குவரத்து வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும் வடக்கு தொடருந்து மார்க்கத்தைத் தரமுயர்த்தல் செயல்பாடுகளும் இந்த ஒரு வார காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகள் முற்பகல் 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படும்.
இதனால் இந்த நேரத்தில் தொடருந்து போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

