Saturday, October 25, 2025 11:52 am
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியாக 1665 நிலையங்களில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

