Thursday, January 22, 2026 12:46 pm
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் IMF பிரதிநிதிகள் குழு அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின் அளவு மற்றும் தாக்கங்களை மதிப்பிடும்.
அத்துடன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் (EFF) தொடர்பான கொள்கை விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தும்.
இந்தப் பயணம், தகவல்களைச் சேகரிப்பதற்கும், இலங்கையின் முன்னேற்றத்துக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை நன்கு புரிந்துகொள்வதற்குமானது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் துறை பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) கூறினார்.

