Monday, December 8, 2025 10:58 am
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் நாட்டிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
அச் சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவிக்காக , விரைவு நிதியளிப்பு வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர நிதியிடல் வசதியின் (RFI) கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தீர்மானித்துள்ளது.
அதேவேளையில், இலங்கையின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் தொடங்குவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டித்வா புயலால் ஏற்பட்ட அழிவிலிருந்து நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக, இவ் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

