Monday, December 8, 2025 10:14 am
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய இந்த சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

