Monday, January 12, 2026 2:37 pm
வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை டொனால்ட் ட்ரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படத்தில் அமெரிக்காவின் 45ஆவது மற்றும் 47ஆவது ஜனாதிபதி என்றும், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளதுடன் வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பதிவுக்கு வேறு எந்த தலைப்பை வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ ட்ரம்ப் பகிரவில்லை.
வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்றுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

