Saturday, December 6, 2025 2:23 pm
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் கண்டி – தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாரன்இன்ன பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு நாரஇன்ன பிரதேசத்திற்கு பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் , மிகப் பெரிய கற்கள் உருண்டு வந்து அங்கிருந்த வீடொன்றின் மேல் விழுந்துள்ளது.
மிகப்பெரிய மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து வந்ததால் , நாரன்இன்ன பகுதியில் உள்ள வீட்டு வரிசை முழுவதும் மண்குவியலின் கீழ் புதைந்ததோடு , மக்களின் உடமைகள் மற்றும் அனைத்து பொருட்களும் மண்ணின் கீழ் புதைந்துள்ளன.
மேலும் , நாரன்இன்ன பகுதியில் உள்ள சில வீடுகளும் ஒரு மொன்டிசோரி பள்ளியும் இந்த மண்சரிவால் முழுவதும் புதைந்து போயுள்ளன.
தற்போது 15 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
நிலச்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பது முற்றிலும் இயலாத ஒரு நிலை ஆகும்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் வெள்ளப்பெருக்கு , மண்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவால் வீடுகள் புதையுண்டது என்பது இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் ஒரு சோகமான நிகழ்வு ஆகும்.
மேலும் , இது போன்ற சம்பவங்கள் நீலகிரி போன்ற பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

