Friday, January 9, 2026 10:17 am
வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழ்வு மண்டலம் காரணமாக, பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ் எச்சரிக்கை காரணமாக பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

