Tuesday, March 17, 2026 4:18 pm
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் (SNSC) செயலாளராக நியமிக்கப்பட்டார். ஈரான் ஜனாதிபதியினதும், மறைந்த உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியினதும் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2008 முதல் 2020 வரை 12 வருடங்களாக ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றிய ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஆவார்.
ஈரானின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கோரியுள்ள போதிலும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அலி லாரிஜானியின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈரானிய அரச ஊடகங்களாலும் பகிரப்பட்டுள்ள இந்தக் குறிப்பானது, அண்மையில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உயிரிழந்த வீரர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தக் குறிப்பு வெளியாகியுள்ளது.

