Tuesday, November 4, 2025 2:23 pm
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04.11.2025) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் காரில் வந்த அடையாளம் தெரியாத குழு ஒன்று, நபர் ஒருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

