Sunday, November 9, 2025 12:36 pm
கொழும்பு வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 வயதுடைய இருவரும் துப்பாக்கியை றஒருவருக்கு கொடுப்பதற்காக காரில் சென்றுகொண்டிந்த வேளை வத்தளை அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸார் மறித்துள்ளனர். நிற்காது சென்றமையினால் பொலிஸார் துரத்திச் சென்று நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரையும் மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

