Thursday, November 20, 2025 11:17 am
தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
பேத்தியாரான கமலா அம்மா நோய்வாய்ப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 75வது வயதில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு நோயுற்ற நிலையில் மரணமானார். தாய், தந்தையின் பாதுகாப்பு இல்லாத நிலையில் நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை பேத்தியாரான 75 வயதுடைய கமலா என்பவர் பராமரித்து வந்தார்.
ஆனந்தசுதாகரின் விடுதலை குறித்த பல இடங்களிலும் குரல் கொடுத்தவர் இவர் என்பவர் குறிப்பிடத்தக்கதாகும். தந்தை சிறையில் வாடுகின்ற நிலையில், பேத்தியும் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

