மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் (28) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய அபராதங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் 33 அபராத விதிமீறல்களுக்கு Govpay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சகம் பொலிஸ் அதிகாரிகளுக்கு பல பயிற்சித் திட்டங்களை வழங்கவுள்ளது.
இந்த செயல்முறை ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் மேல் மாகாணத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Trending
- அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
- மலையக மக்களுக்காக நாமலும் குரல்
- மாகாண சபைகளில் 61,000 இற்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள்
- உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் இலங்கை 15 இடங்கள் முன்னேற்றம்
- 6 அரிய வகை பாம்புகளை கடத்திவந்த இலங்கை பெண் கைது
- அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்
- தாயும் மகனும் வெட்டிக் கொலை
- ரணிலை சந்தித்த சீன தூதுவர்