Monday, December 1, 2025 1:09 pm
அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
மக்கள் நலன் தொடர்பில் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்த வேண்டியுள்ளது.அதற்காக சில மணி நேரம் கேட்டும் வாய்ப்பை சபாநாயகர் தரவில்லை. இந்த அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத படுகொலையாகவே கருதப்படுகின்றது. மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க முடியாத இந்த உயரிய சபையில் இருந்து வெளியேறுகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழர் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள், அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்தில் தோல்வியடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி, பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.

