Wednesday, October 29, 2025 4:16 pm
யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும், அதன் சவால்கள் குறித்தும் ஆராயும் நோக்கில், கள ஆய்வு ஒன்று இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ் மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், துறைசார் அதிகாரிகள், தனியார் போக்குவரத்து சேவையின் தலைவர், அரச போக்குவரத்து சபையின் அதிகாரிகள் என பலரும் குறித்த கள விஜயத்தில் பங்குபற்றியிருந்தனர்.

இதன் போது நெடுந்தூர சேவை பேருந்து நிலையம், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டதுடன், குறித்த இரு பேருந்து நிலையங்களின் அதிகாரிகளுடனும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


