Saturday, December 27, 2025 4:30 pm
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக 50,000 ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டது.
அதற்கமைய இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலைய செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 3665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 25000 மற்றும் 50000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு காணிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

