Friday, December 12, 2025 12:18 pm
நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை (12) தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை , அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் , அசுர வேகத்தில் உயர்ந்து தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய (12) நிலவரப்படி உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு தங்க விலை நேற்றுடன் (11) ஒப்பிடுகையில் இன்று (12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதற்கமைய , இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 312 ,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் இதன் விலை 309 ,200 ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339 ,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

