Monday, March 30, 2026 3:17 pm
தங்கத்தின் விலையில் இன்று நண்பகல் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்று காலை தங்கவிலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், நண்பகல் 3000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது

