Monday, February 2, 2026 1:59 pm
கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4889 அமெரிக்க டொலராக காணப்பட்டது. இன்று திங்கட்கிழமை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 கரட் ஒரு பவுண் தங்கம் ரூ. 338,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 368,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

