Wednesday, January 21, 2026 12:57 pm
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4843 அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு தங்கத்தின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையின் தரவுகளின்படி இன்று புதன்கிழமை காலை தங்க விலை 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 351,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
நேற்று 370,000 ஆகக் காணப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை, இன்று 380,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

