Monday, January 5, 2026 12:13 pm
கடந்த வாரம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (05) 3000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 332000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41500ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

