Monday, December 15, 2025 12:36 pm
நாட்டில் இன்று திங்கட்கிழமை (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி , 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை , 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம் 339,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி 22 கரட் தங்கம் பவுண் ஒன்று , 314200 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை , 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாயாகவும் , 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39 ,275 ரூபாயாகவும் , விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

