Monday, January 26, 2026 2:13 pm
தங்கம் ஒரு அவுன்ஸ் 5000 அமெரிக்க டொலர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை உயர்ந்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 3,97,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம் 22 கரட் தங்கத்தின் விலையானது 3,67,200 ரூபாவாக காணப்படுகிறது.
இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 12,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

