உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்ச அளவிற்கு கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய நாளில் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அதே நேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது நேற்றைய நாளில் 351,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால், இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.