Tuesday, March 24, 2026 4:44 pm
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை மேலும் 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கவிலை சுமார் 38000 ரூபாவால் வீழ்ச்சியாடைந்துள்ளது.
கடந்த வாரம் 17ஆம் திகதி 408000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று செவ்வாய்கிழமை 370000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இதேநேரம் கடந்த வாரம் 17ஆம் திகதி 375300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

