Friday, January 30, 2026 1:25 pm
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 400,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

