Wednesday, March 11, 2026 10:48 am
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3990 ரூபாவாக உயர்ந்துள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1602 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 750 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

