Monday, March 16, 2026 12:47 pm
இலங்கை கடற்பரப்பில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்காவினால் மூழ்கடிக்கப்பட்ட ‘டெனா’ (Dena) போர்க்கப்பலில் பலியான 84 மாலுமிகளுக்கான இறுதி ஊர்வலம் இந்த வாரம் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது.
இந்த இறுதி ஊர்வலம் எதிர்வரும் புதன்கிழமை மத்திய தெஹ்ரானில் நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை தலைநகரின் முக்கிய சதுக்கங்களில் விடைபெறும் நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் ஆயுதங்கள் இன்றிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணைத் தாக்குதலில் இந்த போர்க்கப்பல் சிதைவடைந்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

