Thursday, December 4, 2025 3:55 pm
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களையும் உலுக்கிப் போட்ட டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கத்தினை நிவர்த்தி செய்யும் முகமாக உலக சுகாதார ஸ்தாபனம் 175000 அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்கியுள்ளது.
இவ் அனர்த்தம் கடுமையான உள்கட்டமைப்பு சேதம்,பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதுடன் பல உயிரிழப்புகள் ,இடப்பெயர்வு மற்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களையும் முடக்கியது.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் முழுமையாக உறுதி பூண்டுள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட வைத்தியர் ராஜேஷ் பாண்டவ் கூறியுள்ளார்.

