Wednesday, March 18, 2026 4:10 pm
QR குறியீட்டின்படி எரிபொருள் வழங்கும் போது, நாளை முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது 0 ஆகவோ இருந்தால் இரட்டைப்படை நாட்களிலும், மற்ற எண்களுக்கு ஒற்றைப்படை நாட்களிலும் எரிபொருள் வழங்கப்படும்.
அதாவது வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

