Monday, March 16, 2026 2:02 pm
எரிபொருள் நெருக்கடி, விலை அதிகரிப்பு மற்றும் QR குறியீடு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களால் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவோ அல்லது தொலைதூரக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தவோ இதுவரையில் கல்வி அமைச்சு எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என்றும் கல்வி அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

