Wednesday, February 11, 2026 2:15 pm
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பெப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அரசமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
அடுத்த வாரம் புதுடில்லியில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்குச் செல்லும் மெக்ரொன், அங்கு “இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டை” தொடங்கி வைப்பார்.
மோடியும் மெக்ரோனும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள்.
இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்த மாதம் இந்தியாவில் நடைபெறும் AI இம்பாக்ட் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

