Monday, December 29, 2025 4:07 pm
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்காக்கில் போதைப்பொருளை பெற்று, இந்தியாவின் மும்பைக்குச் சென்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருளின் நிறை 20 கிலோ மற்றும் 684 கிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

