Tuesday, January 13, 2026 11:13 am
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் நேற்று மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணித்த நான்கு பேர் இதன்போது உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன், புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குனதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

