Wednesday, January 7, 2026 9:58 am
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.
இதன் போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

