Saturday, December 27, 2025 4:14 pm
2026ம் ஆண்டின் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா பங்கேற்க உள்ளது.
அமெரிக்கா கிரிக்கெட் அணி தமது உலகக் கிண்ணப் பயிற்சிகளை இலங்கையிலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளமையால் , ஜனவரி மாதம் 10ம் திகதி இலங்கை வரவுள்ளது.
2026ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா அணி தமது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இப் போட்டியானது பெப்ரவரி 7ம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி , அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் , அவருக்கு அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் என்ற பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

