Thursday, February 19, 2026 4:19 pm
இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சித்தன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிளர்ச்சிக்கு மூளையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தென் கொரிய நீதிமன்றம் இன்று அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பித்தது.
2024 டிசம்பரில் யூன் சுக் இயோல் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது தேசிய சட்டமன்றத்தை முடக்கும் நோக்கம் கொண்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
வழக்கு விசாரணையில் மரண தண்டனை விதிக்குமாறு சட்டத்தரணிகள் மனுவில் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் 65 வயதான முன்னாள் ஜனாதிபதிக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
எனினும், யூன் சுக் இயோல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இராணுவச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைத் தடுப்பது குறித்து எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாகக் கொண்டதாக அவரது நடவடிக்கை இருப்பதாகவும் வாதிட்டார்.
தென் கொரிய சட்டத்தின் கீழ் ஒரு கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்துவதுவதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
தென் கொரியா இறுதியாக 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனையை வழங்கியது, ஆனால் 1997 முதல் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

