Friday, January 16, 2026 2:16 pm
தென்கொரியவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2024 cடிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி பாராளுமன்றை முடக்க முயன்றார். எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் பின்னர் இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
