Tuesday, December 30, 2025 2:19 pm
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச நிறுவனமான லங்கா சதொசவிற்கு சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி கைதுசெய்யப்பட்ட ஜொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

