Monday, January 5, 2026 1:11 pm
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்ததுடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளரும் கைது செய்யப்பட்டதுடன் நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

