Saturday, December 27, 2025 10:07 am
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி, திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றவாளி 2020 ஆம் ஆண்டு பொலிஸாருடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரிடம் இருந்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார் என்றும், விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

