ஜப்பான் நாட்டில் 1990களின் நடுப் பகுதியில் அரசியலில் ஈடுபட்டு பிரதமராகவும் பதவி வகித்திருந்த டோமிச்சி முரயாமா (Tomiichi Murayama) இன்று வெள்ளிக்கிழமை தனது 101 வயதில் காலமானார்.
சொந்த ஊரான ஒய்டாவில் காலமானதாக ஜப்பானின் கியோடோ நியுஸ் (Kyoto News) செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும், ஜூன் 1994 முதல் ஜனவரி 1996 வரை பிரதமராகவும் பணியாற்றியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா ஜப்பான் அரசியலில் ஒரு மைல் கல் என்றும் ஜப்பானின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் சிறந்த இராஜ தந்திர உறவை பேணிய இவர், இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று அமைதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர், ஜப்பான் அரசியல் – பொருளாதார ரீதியில் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கு பல விரிவுரைகளையும் ஆற்றியிருந்தார்.