மறைந்த லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சதி செய்ததற்காக பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்க்கோசிக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
70 வயதான நிக்கோலஸ் சர்கோசி சீன் நதியின் தெற்கே உள்ள 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சிறைச்சாலையின் நுழைவாயிலில் காலை உயர் பாதுகாப்புக்கு மத்தியில் வந்தார். லா சாண்டே சிறையில் தனக்கு எந்த சிறப்பு சிகிச்சையும் வேண்டாம் என்று சார்க்கோசி கூறியுள்ளார் .ஆனாலும் அவரது சொந்த பாதுகாப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
2007 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு லிபிய பணத்தில் மில்லியன் கணக்கான யூரோக்கள் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சர்கோசி எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்து வருகிறார்.