Tuesday, October 21, 2025 9:50 pm
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்குச் சென்று புதுடில்லியில் நடததிய சந்திப்புகள் இலங்கைக்கு நன்மிப்பை உருவாக்கியுள்ளதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் கூட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரை நிகழ்ததிய அலி சப்ரி, எவருக்கும் சார்புத் தன்மையற்ற வெளியுறவுக்கொள்கை முக்கியமானது என்றும் கூறினார்.
பொருளாதார நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கையின் நிதி நிலைமை பற்றிய பிரதமர் விளக்கிய குறிப்புகள் சிறப்பானவை எனவும் தெரிவித்தார்
ஊழல்மோசடிகளை கையாளும் முறைமை, மற்றும் நிதியியல் ஒழுக்கம், வருமான ஒருங்கிணைப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு, செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் போன்ற சர்வதேச நாணய நியதியத்தின் பரிந்துரைகள் தூரநோக்குச் சிந்தனை கொண்டவை என்றும் ரணில் விக்கிரமசிங்க ஜனாhதிபதியாக பதவி வகித்திருந்தபோது இவை அமுலுக்கு வந்தாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.
இந்த அடிப்படைகளின் சிறந்த புரிதல்கள், பிரதமர் ஹரிணியிடம் உள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சிறப்புத் திட்டங்களுக்கு பொருத்தமான வழிகளை திறக்கும் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.