Wednesday, November 19, 2025 12:30 pm
யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் எனவும், அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை குறித்த இளைஞன் வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

