Friday, December 5, 2025 2:39 pm
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பெண் டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்த வேளை, பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த பெண்ணும், குழந்தையும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அம்புலன்ஸ் மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

