Wednesday, December 24, 2025 11:32 am
வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 டொலர்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் மற்றும் பொருளாதார சூழலால் , முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக வட்டி விகிதங்கள் குறையும் போது அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவடைவதால் , முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு மாற்றாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த விலை உயர்வு தங்க நகைகளின் விலையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JP Morgan, Bank of America போன்ற நிறுவனங்கள், இனிவரும் காலங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,000 டொலர்களை எட்டக்கூடும் என எதிர்பார்க்கின்றன.

