யாழ்ப்பாண செம்மணியிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
